அவரின் கிரிக்கெட் முடிவு வருத்தமனதாக இருக்கலாம்!! இந்திய அணி வீரர் தினேஷ் கருத்து!
இலங்கைக்கு எதிரான தொடரில் ஷிகர் தவானின் முடிவு சோகமானதாக இருக்கலாம் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
இந்திய அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேசத்தில் விளையாடி வருகிறது.முதல் இரண்டு போட்டிகள் மிர்பூரில் நடந்தது. இதில் முதல் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்திலும் வங்காள தேச அணி திரில் வெற்றியைப் பெற்று தொடரை வென்று கோப்பையை கைப்பற்றியது.அந்த அணியின் மெஹிதி ஹசன் மிராஸ் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி ஆட்டத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
அதே நேரத்தில் இந்திய அணியின் செயல்பாடு மோசமானதாக இருந்தது.இந்நிலையில் மூன்றாவது போட்டியிலாவது ஆறுதல் வெற்றிப் பெற்றாக வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.3-வது ஒருநாள் போட்டி சட்டோகிராமில் நடைப்பெற்றது.முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 409-8 என்ற இமாலய ஸ்கோரை பதிவு செய்தது.
கோலி 113 ரன்கள் எடுத்து தனது 44- வது சதத்தை ஒருநாள் போட்டி அரங்கில் பதிவு செய்தார்.அவருடன் சேர்ந்து ஆடிய இஷான் கிஷான் ஒருநாள் போட்டியிலேயே தனது முதல் சதத்தையும் இரட்டை சதத்தையும் பதிவு செய்தார்.அவர் 131 பந்தில் 10 சிக்சர்கள் 24 பவுண்டரிகள் 210 ரன்கள் எடுத்து வரலாற்று சாதனை புரிந்தார். மேலும் ஒருநாள் போட்டி அரங்கில் மிகக்குறைந்த(126 பந்து) பந்தில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் படைத்தார். மேலும் கோலி-இஷான் ஜோடி 290 ரன்கள் எடுத்து நல்லதோர் தொடக்கத்தையும் கொடுத்தது. இதனால் இந்திய அணி 227 என்ற அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்று இமாலய வெற்றியைப் பெற்றது. இஷான் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
ஆனால் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ஷிகர் தவான் சொற்ப ரன்னில் (3 ரன்) ஆட்டமிழந்து அணிக்கு மோசமான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்து இருந்தார். இந்நிலையில் இலங்கைக்கு எதிரான வீரர்கள் தேர்வு செய்யும் போது அவருக்கு வருத்தமான சூழ்நிலை உருவாகலாம். காயம் காரணமாக விலகி இருக்கும் ரோகித் அணிக்கு திரும்பினால் யாராவது அணியில் இடம் பெற முடியாத சூழ்நிலை உருவாகலாம்.அது தவானாக இருக்கலாம்.இதனால் தவானின் சிறந்த கிரிக்கெட் வரலாற்றில் சோகமான முடிவாக அமையலாம். தைவானின் நிலை என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே வேளையில் தவானின் ஒருநாள் மிகச்சிறந்த கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரலாம் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
மேலும் சுப்மன் கில்லின் ஆட்டமும் சிறப்பாக உள்ளது. மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷானை ஆட்டத்தில் சேர்க்காமல் இருப்பார்களா?? புதிய தேர்வாளர்கள் சில கேள்விகளுக்கு பதில் கூற வேண்டும். சுப்மன் கில் சேர்க்கப்பட்டால் அவர் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார்.தேவை ஏற்படும் சமயங்களில் அவரின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இஷானுக்கு வாய்ப்பு வழங்கப்படும் போது இடது, வலது பேட்ஸ்மேன்கள் என்ற கணக்கும் ஏற்றுக்கொள்ள அதிக வைப்பு உள்ளது.இது தவானுக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்ப்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.