இவர்களுக்கு கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கப்படும்! முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட தகவல்!
வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்து.
அதனால் பொங்கல் போன்ற பண்டிகைகள் அனைத்தும் சிறப்பாக கொண்டாடப்படவில்லை.இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பண்டிகைகள் அனைத்தும் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை வெகு விமர்சியாக கொண்டாடப்பட்ட நிலையில் தற்போது நெருங்கி கொண்டிருக்கும் பொங்கல் திருநாளையும் மக்கள் சிறப்பாக கொண்டாட தயாராகி வருகின்றது.அதனால் பொங்கலில் முதலிடம் பிடிப்பது கரும்புதான்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவின் படி 2020-21 அரவைப் பருவத்திற்கு மத்திய அரசு அறிவித்த நியாயமான மற்றும் ஆதாய விற்பனை ரூ2,707.50 ஐவிட கூடுதலாக உற்பத்தி ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ 192.50 வழங்கப்பட்டு வந்தது.அதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ2900 கிடைத்தது.
இந்நிலையில் வேளாண் பட்ஜெட்டில் அறிவித்தபடி 2021-22 அரவைப் பருவத்துக்கு மத்திய அரசு அறிவித்துள்ள டன் ஒன்றுக்கு நியாயமான மற்றும் ஆதாய விலையானது ரூ2,755 விட கூடுதலாக மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ 195 வழங்கும் வகையில் ரூ 199 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 7 ஆம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இதன் மூலம் தகுதி வாய்த்த கரும்பு விவாசாயிகள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.