உலக கோப்பை தோல்வி எதிரொலி! ரொனால்டோ உருக்கமான பதிவு!!

உலக கோப்பை தோல்வி எதிரொலி! ரொனால்டோ உருக்கமான பதிவு!!

தோஹாவில் நடைப்பெற்ற கால்பந்தாட்டத்தின் காலிறுதி ஆட்டத்தில் போர்ச்சுக்கல் 0-1 என்ற புள்ளிக்கணக்கில் தோற்று வெளியேறி இருப்பது குறித்து அந்த அணியின் புகழ்ப்பெற்ற வீரர் ரொனால்டோ உருக்கமான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

கால்பந்தாட்டத்தில் உலக புகழ்ப்பெற்ற வீரர் ரொனால்டோ.  37 வயதான இவர் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்தவர். இவர் போர்ச்சுக்கல் அணிக்காக விளையாடி 195 ஆட்டங்களில்  118 கோல்கள் அடித்துள்ளார். 16  வருடங்களில் 5 உலகக் கோப்பையில் கோல் அடித்துள்ளார்.உலகெங்கிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தோஹாவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் மோராக்கொவிடம் தோற்று வெளியேறி இருக்கிறது போர்ச்சுக்கல். ரொனால்டோ உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ரசிகர்களின் கனவு மெய்ப்படவில்லை. மேலும் ரொனால்டோவின் கடைசி உலகக் கோப்பை போட்டி இதுவாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது. இவ்வாறு இருக்கையில் உலகக் கோப்பை தோல்வி குறித்து ரொனால்டோ உருக்கமான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் அதில்,

நான் சர்வதேச அளவில் பல கோப்பைகளை வென்றுள்ளேன். இருப்பினும் எனது நாட்டின் பெயரை சர்வதேச அளவில் கொண்டுச் செல்ல வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. அதற்காக நான் போராடி வந்தேன். என்னுடைய வாழ்க்கையில் போர்ச்சுக்கலுக்கு உலகக் கோப்பை பெற்றுத் தருவதே என்னுடைய வாழ்நாள் கனவாக இருந்து வந்தது. நான் மிகச் சிறந்த அணி வீரர்களுடன் விளையாடி இருக்கிறேன். பல இலட்சம் வீரர்கள் எனக்கு ஆதரவளித்து உறுதுணையாக இருந்தார்கள். அணிக்காக நான் நிறைய செய்துள்ளேன். எந்த நிலையிலும் போட்டியில் இருந்து பின்வாங்கியது இல்லை. எனது கனவையும் நான் விட்டுத் தரவில்லை.

எனது இந்த கனவு துரதிர்ஷ்டவசமாக முடிந்து விட்டது. இதைப்பற்றி பலரும் பலவிதமாக பேசிவிட்டனர்.எழுதி விட்டனர். இவர்கள் அனைவருக்கும் ஒன்றைத் தெரிவித்துக்கொள்கிறேன். அணிக்கான எனது உழைப்பு ஓருபோதும் மாறியது இல்லை. அனைவரும் கோல் அடிக்க உதவும் வீரராக நன் இருந்து வந்தேன். என்னுடைய அணிக்காகவும், வீரர்க்களுக்காகவும் நான் எப்போதும் மறுத்தது இல்லை. இதற்கு மேல் இதைப்பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. போர்ச்சுக்கலுக்கு நன்றி! கத்தாருக்கு நன்றி! கனவு இருந்தவரை நன்றாக இருந்தது. தற்போது காலம் அதற்க்கான ஆலோசனையை வழங்கி ஒரு முடிவுக்கு வர உதவும் என்றும் அவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Leave a Comment