அகவிலைப்படி உயர்வினை தொடர்ந்து அரசு ஊழியர்கள் பலரும் தங்களது 18 மாத அகவிலைப்படி நிலுவை தொகையை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். தங்களுக்கான நிலுவை தொகையை வழங்கக்கோரி ஊழியர்களுக்கு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தது வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அகவிலைப்படி மொத்தம் 3 முறை உயர்த்தப்பட்டுள்ளது, தற்போது ஊழியர்களுக்கான அகவிலைப்படி மொத்தமாக 38 சதவீதமாக உள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, அரசாங்கம் நிலுவை தொகையினை மூன்று தவணைகளாக ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டிலிருந்து இந்த தவணை தொகை ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை மூன்று தவணைகள் (டிஏ ஏரியர்ஸ்) நிலுவைத் தொகை உள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா பெருந்தொடரின் காரணமாக பணம் ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படாமல் போனது. அதன்பின்னர் 18 மாத அகவிலைப்படி நிலுவை தொகை வழங்கப்படாமல், ஜூலை 2021க்குப் பிறகு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி மட்டுமே ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களின் சம்பள மேட்ரிக்ஸின் படி, குறைந்தபட்ச சம்பளம் ரூ.18000 பெறும் ஊழியருக்கு ரூ.11,880 பாக்கியாக (ரூ.4320+3240+4320) கிடைக்கும்.
இதில் லெவல்-1 அடிப்படை ஊதிய வரம்பின்படி ரூ.18,000 முதல் ரூ.56,900 வரையில் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச தர ஊதியத்துடன் 2020 ஜனவரி முதல் ஜூலை வரை முதல் தவணையாக ரூ.4320 வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், ஜூலை முதல் டிசம்பர் 2020 வரை வழங்கப்படும் அகவிலைப்படி நிலுவை தொகை ரூ.3,240 ஆக இருக்கும். மேலும் 2021 ஜனவரி முதல் ஜூலை வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகை ரூ.4,320 ஆக இருக்கும் என்று கருதப்படுகிறது.