மத்திய அரசிடம் கையேந்தும் நிலை மாற வேண்டும்! வருத்தம் தெரிவிக்கும் முதல்வர்!
புதுச்சேரியில் நேற்று அண்ணா சாலை தனியார் விடுதியில் மத்திய சுற்றுலா அமைச்சக நிதியின் கீழ் சுதேசி தர்ஷன் திட்டத்தில்,மேம்படுத்தப்பட்ட திட்டங்களை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவானது மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது.மேலும் இந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசினார்.அப்போது அவர் கூறுகையில் சுற்றுலாவை மேம்படுத்த புதுச்சேரிக்கு மத்திய அதிக நிதி ஒதுக்கியுள்ளது.
மேலும் புதுச்சேரி சிங்கப்பூர் போல கொண்டு வரவேண்டும் என்று கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கூறப்படுகின்றது.ஆனால் அதனை நிறைவேற்ற முடியவில்லை.தார்ச் சாலைகள் அமைப்பதற்காக பூஜை போடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அதிகளவு பெய்து வருவதால் சாலைகள் போடும் பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி பல்வேறு புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் நிர்வாக சிக்கல்கள் இருக்கின்றது அதனால் காலதாமதம் ஏற்படுகின்றது.அனைத்திற்கும் மத்திய அரசிடம் அனுமதி வாங்கி செயல்படுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.அந்த நிலை மாறி எதை நாம் விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்பதை நாம் கையில் எடுத்து செய்ய வேண்டும்.மத்திய அரசின் அனுமதிபெற்று தான் செயல்படுத்த வேண்டும் என்ற நிலை உள்ளதால் ஒரு செயலை விரைவாக செய்து முடிக்க முடியவில்லை என கூறினார்.