75 வயதில் இரண்டாவது திருமணம் ; மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் !

0
177

75 வயதில் இரண்டாவது திருமணம் ; மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் !

75 வயதில் திருமணம் செய்துகொண்ட பெங்காலி நடிகர் திபாங்கர் டே மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பிரபல பெங்காலி நடிகரான திபாங்கர் டே பல வருடங்களாக டோலான் ராய் எனும் 49 வயது நடிகையும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இவர் தனது முதல் மனைவியை ஏற்கனவே விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தகக்து. ஆனாலும் இவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டூ கெதராக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சூழ இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

இந்த திருமணம் பெங்காலி திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் திருமணம் முடிந்த அடுத்த மறுநாள் திபாங்கர் டே மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது அவரது ரசிகர்கள் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleதலையில் மூன்று குண்டுகளோடு 7 கி.மீ. கார் ஓட்டிய பெண்மணி ! மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை !!
Next articleஎம் ஜி ஆர் நடிக்கும் பொன்னியின் செல்வன் ; கலக்கலானப் பாடல் இதோ !