பிரபல விஜய் டிவி பிரபலம் திடீர் உயிரிழப்பு! சோகத்தில் சின்னத்திரை!!
கொரோனா காலகட்டத்தில் திரை பிரபலங்கள் என தொடங்கி பலரின் உயிர் இழக்க நேரிட்டதை அடுத்து தற்பொழுது விஜய் டிவியின் சீரியல் இயக்குனர் ஒருவர் உயிரிழந்த உள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா செல்லம்மா பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர் மௌன ராகம் போன்ற நெடுந்தொடர்கள் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து தற்பொழுது வரை தொடர்ந்து வருகிறது.அந்த வகையில் மௌன ராகம் ஈரமான ரோஜா பாகம் 2 ஆகிய நாடகத்திற்கு பெருமளவு ரசிகர்கள் தற்பொழுது வரை உள்ளனர். இந்த நாடகத்தை தாய் செல்வம் என்பவர் இயக்கி வந்தார்.
இவர் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளிவந்த நியூட்டனின் மூன்றாம் விதி என்ற படத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஜய் டிவி சீரியல் இன்றி பல சீரியல்களை இவர் இயக்கி நெடுந்தொடராக வெற்றியடைய செய்துள்ளார்.அந்த வகையில் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பார்க்கப்பட்டு வரும் ஈரமான ரோஜா பாவம் இரண்டாம் நெடுந்தொடரே இயக்கம் தாய் செல்வம் உடல்நிலை பாதிப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.
இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை விஜய் டிவி தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் உங்களது படைப்புகள் என்றும் எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் என்று கூறியுள்ளனர்.