மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு இப்படி ஒரு கதியா? அரசு ஏன் கண்டுக்கொள்ளவில்லை?
தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் முறையில் மாறி வருகின்றனர்.அதனால் ஆதார் அதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றது.உலகம் முழுவதுமே ஒரு செல்போனில் அடங்கும் அந்த செல்போனில் முதன்மையாக இருக்கும் சிம்கார்டு வாங்குவதில் இருந்து கோவிலில் சாமி தரிசனம் செய்வது வரையிலும் ஆதார் தான்.
பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வயது முதலே ஆதார் எடுக்கப்பட்டு வருகின்றது அதற்காக அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் சேவை மையம் நிறுவப்பட்டுள்ளது.அதில் வாக்காளர் அட்டை பெயர் சேர்த்தல்,பெயர் நீக்கம் ,புதிய ஆதார் விண்ணப்பிக்க போன்ற சேவைகளுக்கு செய்யப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் திருப்பூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நிரந்தர ஆதார் சேவை மையம் இருக்கின்றது.அங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் அங்கு பொதுமக்கள் அமர்வதுக்கு ஏற்ற இருக்கை வசதி இல்லாமல் தரையில் அமர்ந்து இருக்கின்றனர்.குறிப்பாக முதியவர்களும் புதிதாக ஆதார் அட்டை விண்ணப்பிக்க கைகுழந்தைகளுடன் வரும் பெண்களும் இவ்வாறு இருக்கை வசதி இல்லாததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இதுபோலவே பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கை வசதி இல்லை.அதனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இருக்கை வசதியை அமைத்து தரவேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருந்து வருகின்றது.