மீண்டும் பால் விலை உயர்வு : தனியார் நிறுவனங்கள் முடிவு ! பொதுமக்கள் தலையில் மேலும் சுமை !!
வரும் 20 ஆம் தேதி முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்பட உள்ளன.
தமிழகத்தில் அரசு நிறுவனமான ஆவின் தவிர, ஆரோக்யா, ஹெரிட்டேஜ், திருமலா உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும் பால் விநியோகம் செய்து வருகின்றன. பால் உற்பத்தியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான பால் உற்பத்தி விலையை உயர்த்தி கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.
அதேசமயம் பால் விற்பனை விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி பால் உற்பத்தியாளர்களுக்கு பசும்பால் விலையை 4 ரூபாய் உயர்த்தியும், எருமை பால் விலையை 6 ரூபாய் உயர்த்தியும் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. விற்பனை விலையை 6 ரூபாய் அதிகப்படுத்தி இருந்தது. இதனால் பொதுமக்கள் மேல் அதிக சுமை விழுந்தது. இதையடுத்து தனியார் நிறுவனங்களும் தங்கள் பால் விலையை உயர்த்தினர்.
பால் விலையை உயர்த்தி ஒரு ஆண்டு கூட ஆகாத நிலையில் மக்களின் மீதான சுமையை உயர்த்தும் வன்ணம் ஆரோக்யா, ஹெரிட்டேஜ் உள்ளிட்ட நிறுவனங்கள் அனைத்தும் வரும் 20 ஆம் தேதி முதல் பால்விலை லிட்டருக்கு 4 ரூபாய் விலை உயர்த்த உள்ளனர். அதேப்போல தயிர் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்த முடிவு செய்துள்ளனர்.
இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மேல் அதிக சுமை விழும் சூழல் உருவாகியுள்ளது.