குட் நியூஸ்: பள்ளிகளுக்கு 9 நாள் விடுமுறை!! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை!!

0
338

குட் நியூஸ்: பள்ளிகளுக்கு 9 நாள் விடுமுறை!! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை!!

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை 9 நாள் விடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி முதல், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவ தேர்வு நடைபெற்ற வருகிறது.

அதிலும் பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு,பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் கவனத்துடன் இந்த அரையாண்டு தேர்வு,மாவட்ட அளவில் நடத்தப்பட்டு வருகிறது.மேலும் இந்த ஆண்டிற்கான விடைத்தாள்களை விரைவில் திருத்தி வழங்கவும் பள்ளி கல்வித்துறை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி
1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இரண்டாம் பருவ தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வு முடியவிருக்கும் நிலையில் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.இந்த விடுமுறையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையும் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.ஜனவரி 2-ம் தேதி முதல் பள்ளி வேலை நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleஉடல் துர்நாற்றமா?? எப்படி குளித்தாலும் போகவில்லையா?? இது உங்களுக்கு தான்!!!
Next articleதமிழகத்தில் 2 நாட்களுக்கு மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here