உத்தர்காசியில் தீடீர் நிலநடுக்கம்! பீதியில் பொதுமக்கள்
இன்று அதிகாலையில் உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள உத்தர்காசியில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள உத்தர்காசியில் இன்று அதிகாலையில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது.
உத்தர்காசியிலிருந்து கிழக்கு தென்கிழக்கில் சுமார் 24 கிலோமீட்டர் தொலைவில் அதிகாலை 1.50 மணியளவில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த நிலநடுக்கமானது தரையிலிருந்து சுமார் 5 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.