ஏப்ரல் 1 முதல் கேஸ் சிலிண்டர் ரூ.500 மட்டுமே! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு

Photo of author

By Anand

ஏப்ரல் 1 முதல் கேஸ் சிலிண்டர் ரூ.500 மட்டுமே! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் கேஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இன்று காங்கிரஸ் கட்சியின் சார்பாக ராகுல் காந்தி நடத்தும் பாதயாத்திரையில் கலந்து கொண்டு பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிவித்துள்ளதாவது வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கும் உஜ்வாலா திட்டத்தில் பதிவு செய்தவர்களுக்கும் 500 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பானது ராஜஸ்தான் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தற்போது சிலிண்டரின் விலை சுமார் 1,000 ரூபாய் என்று விற்று வரும் நிலையில் 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என்பது பெரும் வரப்பிரசாதம் என்று ராஜஸ்தான் மக்கள் இதுறித்து கருத்து தெரிவித்துள்ளனர்

மேலும் இந்த முறையை தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை எழுந்து வருகிறது.