தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து!! கடைசி டெஸ்ட் போட்டியில் அபாரம்!!

0
144
England won the series!! Great in the last test!!
England won the series!! Great in the last test!!

தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து!! கடைசி டெஸ்ட் போட்டியில் அபாரம்!!

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து.பாகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அந்த அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 2-0 என்ற அளவில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இருநாடுகளுக்கும் இடையே 3-வது  டெஸ்ட் போட்டி கராச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்க்ஸ்- இல் பாகிஸ்தான் 304 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்க்ஸ் ஐ தொடங்கிய இங்கிலாந்து முதலில் சற்று தடுமாறினாலும் பின் நிலைத்து விளையாடியது. முதல் இன்னிங்க்ஸ்-ல் அந்த அணி 81.4 ஓவரில்  354  ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.இதனால் இங்கிலாந்து 50 ரன்கள் முன்னிலை வகித்தது.

பின்னர் 2-வது இன்னிங்க்ஸ் ஐ தொடங்கிய பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களை ஜேக் லீச் வீழ்த்தினார். அடுத்து களம் இறங்கிய கேப்டன் பாபர் ஆசமும் 54 ரன்களும் ஷாகில் 53 ரன்களும் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இறுதியில் பாகிஸ்தான் 74.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 216 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 167 என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்க்ஸ் ஐ தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான பென் டக்கட் மற்றும் ஜாக் க்ராவலி இருவரும் மட்டையை சுழற்றினர். 3-வது நாளான நேற்றே ஆட்டத்தை முடிக்க நினைத்தனர்.இங்கிலாந்து அணியின் ஸ்கோர் மளமள வென ஏறியது. இன்று 4-வது ஆட்ட நாளான இன்று வெற்றிக்கு தேவை பட்ட 55 ரன்களை  அடித்து அசத்தியது. இதன் மூலம் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை வென்றது.

இந்த வெற்றியின் மூலம் 3-0 என்ற கணக்கில் முழுமையாக தொடரை கைப்பற்றியது. இந்த தொடர் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்றது குறிப்பிட தக்கது. இந்த போட்டியின் ஆட்ட நாயகன் மற்றும் இந்த தொடரின் தொடர் நாயகன் விருது இங்கிலாந்தின் ஹாரி புரூக்க்கு வழங்கப்பட்டது.

Previous articleகிறிஸ்துவர்களுக்கே தெரியாத உண்மை! இயேசுவின்  பிறப்பு பற்றி அறிந்து கொள்ளலாம்!
Next articleடிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய தகவல்! குரூப் 1 தேர்வுக்கான அட்டவணை!