நாத்தனாரை நம்பி ஏமாந்துடாதீங்க….உங்கள் நாத்தனாரின் உண்மை முகத்தை கண்டறிவதற்கான டிப்ஸ் !

0
151

உங்கள் கணவனின் சகோதரி உங்களுடன் ஷாப்பிங் வருவது அல்லது படம் பார்க்க ஒன்றாக வருவது அல்லது உங்களுடன் கதை பேசுவது போன்றவற்றை செய்வதால் அவர்கள் உங்கள் மீது பாசமாக இருக்கிறாரகள் என்பது அர்த்தமில்லை. சில நாத்தனார்கள் உங்களுடன் தோழியாக பழகுவது போன்று நடித்து உங்களுக்கு ஆப்பு வைத்துவிடுவார்கள், அதனால் நீங்கள் சற்று விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். உங்கள் மீது பாசம் இருப்பது போன்று நடிக்கும் நாத்தனாரின் உண்மையான முகத்தை சில அறிகுறிகளை வைத்து நீங்கள் கண்டறியலாம்.

1) உங்கள் மனதில் தோன்றும் கருத்தை முன்வைக்கும் போதெல்லாம், உங்கள் நாத்தனார் அதை நிராகரித்துவிடுவார் மற்றும் உங்கள் கருத்தை எப்போதும் ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டார். நீங்கள் கூறுவது நியாயமானதாக இருந்தாலும் ஒத்துழைப்பு கொடுக்கமாட்டார் மற்றும் உங்கள் முயற்சிகளுக்கெல்லாம் தடையாக இருப்பார்.

2) டாக்சிக் நாத்தனார் உங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற அனைத்து கெட்ட விஷயங்களை பற்றியே அடிக்கடி சுட்டிக்காட்ட முயற்சிப்பார் மற்றும் உங்களுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவார். உங்கள் குடும்பத்தினரையும் உங்களுக்கு எதிராக திருப்ப முயற்சி செய்வார், சில சமயம் உங்களை சமாதானம் செய்வது போல நடிப்பார் இருப்பினும் உங்களை எப்போது தாழ்த்தி பேசிக்கொண்டே இருப்பர்.

3) டாக்சிக் நாத்தனார் எப்போதும் உங்களை தனது கைப்பாவையாக வைத்திருக்கவே முயற்சி செய்வார், அவருக்கு வேண்டிய பல காரியங்களை உங்களை வைத்தே சாதிக்க முயற்சி செய்திருப்பார். நீங்கள் இருக்கும்போது உங்கள் மீது அக்கறை செலுத்துவது போல நடித்து நீங்கள் இல்லாதபோது உங்களை பற்றி அவதூறு பரப்பும் செயல்களில் ஈடுபடுவார்.

4) அடிக்கடி எனக்கு உன் மீது அக்கறை இருக்கிறது என காட்டிக்கொண்டே உங்களை அடிமைப்படுத்த முயற்சி செய்வார், உங்களை பற்றி விமர்சிப்பது மற்றும் உங்களிடம் கடுமையாக நடந்து கொள்வது போன்றவற்றை செய்தால் அவர் 100% டாக்சிக் என்று உணர்ந்து கொள்ளுங்கள்.

5) டாக்சிக் நாத்தனார் எப்போதும் தான் கொடுத்த வாக்குக்கு உண்மையாக இருக்க மாட்டாள். அவர் தன் வசதிக்கேற்ப தன் வார்த்தைகளைத் திரித்து, அது உங்களுடைய தவறு தான் என தோன்ற வைத்து உங்களை குற்ற உணர்ச்சிக்கு தள்ளிவிடுவார்.

Previous articleஉங்கள் பெயரின் முதலெழுத்து ‘G’-ல் ஆரம்பிக்கிறதா? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான்..கவனமா படியுங்க !
Next articleபாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு…உடனே விண்ணப்பியுங்கள் !