நாளை முதல் தொடங்கும் சிறப்பு பூஜை! கூட்ட நெரிசலை தடுக்க நடவடிக்கை!

0
136
Special puja starting from tomorrow! Measures to prevent overcrowding!
Special puja starting from tomorrow! Measures to prevent overcrowding!

நாளை முதல் தொடங்கும் சிறப்பு பூஜை! கூட்ட நெரிசலை தடுக்க நடவடிக்கை!

ஸ்ரீரங்கம் என்பது 108 வைணவத் தலங்களில் முதன்மையானதாக பூலோக வைகுந்தம் என அழைக்கப்படுகின்றது.ஸ்ரீரங்க கோவிலில் நடைபெறும் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி விழாவானது திருமொழித்திருநாள் பகல் பத்து,திருவாயமொழித் திருநாள் ராப்பத்து என 22 நாள்கள் நடைபெறும்.

அந்த நாட்களில் நம்பெருமாள் பல்வேறு அலகாரங்களில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்.ஜனவரி 1 ஆம் தேதி தான் பகல் பத்து விழாவின் கடைசி நாளாகும்.அப்போது மோகினி அலங்காரத்தில் நாச்சியார் திருக்கோலம் நம்பெருமான் எழுந்தருளுவார்.

மேலும் அந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பன்று  ராப்பத்து விழாவானத்து ஜனவரி 2 ஆம் தேதி முதல் நாள்.அதனை தொடர்ந்து ராப்பத்து விழாவின் 7 ஆம் நாளான ஜனவரி 8 ஆம் தேதி திருக்கைத்தலச் சேவையும்,8 ஆம் நாளான ஜனவரி 9 ஆம் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறும்.பத்தாம் நாளான ஜனவரி 11 ஆம் தேதி தீர்த்தவாரியம்,ஜனவரி 12 ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறும்.இந்த வழிபாடுகள் ஆணையர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.இதற்கு அதிகளவு கூட்ட நெரிசல் ஏற்பட்டால் அதனை சரி செய்ய போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

Previous articleபயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்!
Next articleஉங்களுக்கே தெரியாமல் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டாம்? இது தான் அதன் அறிகுறிகள்!