மீண்டு(மீண்டும்) வருகிறது கொரோனா!! மாநில அரசுகளுக்கு சுகாதார துறை அமைச்சர் உஷார் கடிதம்!!
உலகின் பல நாடுகளில் கொரோனா மீண்டும் பரவ தொடங்கியதை அடுத்து மாநில அரசுகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கை குறித்து சுகாதார துறை அமைச்சர் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் தொடங்கி உலகையே அச்சுறுத்திய ஒரு தொற்று நோய் தான் கொரோனா. உலக நாடுகளையே திருப்பி போட்ட இந்த நோய் இந்த வருட தொடக்கத்தில் தடுப்பூசி, மற்றும் பல்வேறு தடுப்பு நடவடிக்கை விளைவாக ஓரளவு கட்டுக்குள் வந்தது. அனைத்து உலக நாடுகளும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்கு மீண்டு வந்து கொண்டிருந்த நிலையில் மீண்டும் கொரோனா பரவுகிறது என்ற செய்தி உலக மக்களை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜப்பான்,சீனா, அமெரிக்கா, கொரியா, பிரேசில் போன்ற நாடுகளில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருகின்றது. நேற்று ஒரே நாளில் ஜப்பான்- 1.85 இலட்சம்,கொரியா – 87,559, பிரான்ஸ்- 71,212 ஜெர்மனி- 52,528, என உலகம் முழுவதிலும் 5,59,018 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனாவின் புதிய அலை கவலையளிக்கும் வகையில் உள்ளது.
இதனையடுத்து இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள மத்திய அரசு சுகாதார துறை செயலாளர் மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் எழுதி உள்ள கடிதத்தில் உலக நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதை சுட்டிக்காட்டி, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்தி, கொரோனா பாதித்தவரின் இரத்த மாதிரிகளை மாநில அரசுகள் மரபணு ஆய்வகத்திற்கு தினசரி அனுப்பும் நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும், அதன் மூலம் புதிய உருமாற்ற வகையை கண்டறிந்து உரிய பொது சுகாதார தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று புதன்கிழமை மத்திய அரசு நடத்த உள்ளது.