ஐபில் மினி ஏலம்!! அதிக விலை போகும் வெளிநாட்டு வீரர்கள்!!
கொச்சியில் இன்று ஐபிஎல் மினி ஏலம் நடைபெறுகிறது. ஸ்டோக்ஸ், சாம் கர்ரன்,கிரீன் ஆகியோர் அதிக விலை போக வாய்ப்புள்ளது.
இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளன. இதையடுத்து வீரர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியது. இந்த ஏலத்தில் பங்கேற்க 991 வீரர்கள் பதிவு செய்து உள்ளனர்.இதில் 405 வீரர்களின் இறுதி பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) வெளியிட்டுள்ளது. இந்த வீரர்களில் இருந்து 87 வீரர்கள் தேர்வு செய்யப்படுவர். இதில் 30 வெளிநாட்டு வீரர்களும் அடக்கம்.
10 அணிகள் சுமார் 163 வீரர்களை தக்க வைத்துள்ளன. 85 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கழட்டி விடப்பட்ட வீரர்களின் இடத்தினை நிரப்புவதற்காக ஐபிஎல் மினி ஏலம்கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இன்று பிற்பகல் 2;30 மணி அளவில் நடக்கிறது. ஏலபட்டியலில் 273 இந்தியர்கள் 132 வெளிநாட்டு வீரர்கள் பங்கு பெறுகின்றனர்.
இங்கிலாந்து அணியில் இருந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் , 20 ஓவர் உலக கோப்பையில் தொடர் நாயகன் விருது பெற்ற சாம் கர்ரன் ஆஸ்திரேலியா வின் கேமரூன் கிரீன் ஜிம்பாப்வே நாட்டின் சிகந்தர் ராசா மற்றும் இந்தியாவில் மயங்க் அகர்வால், மனிஷ் பாண்டே, வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட் பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடிய டெஸ்ட் போட்டியில் அதிரடியாக 3 சதங்கள் விளாசிய ஹாரி புரூக் ஆஸ்திரிரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா போன்றோர் கடுமையான கிராக்கியுடன் அதிக விலை போக கூடிய வாய்ப்பு உள்ள வீரர்கள்.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் சென்ற ஆண்டு காயத்தால் விளையாடாத சாம் கர்ரன்-ஐ சென்னை சூப்பர் கிங்க்ஸ் குறி வைத்துள்ளது. கிறிஸ் மோரிஸ் (தென் ஆப்பிரிக்கா) 2021- ஆம் ஆண்டு 161/4 கோடிக்கு விலை போய் உள்ளார். அந்த தொகையை இந்த ஆண்டு யாரவது முறியடிப்பர்களா? என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. என்.ஜெகதீசன் உட்பட 16 தமிழக வீரர்களும் இந்த பட்டியலில் அடக்கம். லிஸ்ட் ஏ வகை கிரிக்கெட்டில் 277 ரன்கள் மற்றும் தொடர்ச்சியாக 5 சதங்கள் விளாசிய ஜெகதீசனை இழுக்க கடும் போட்டி நிலவுகிறது. அடுத்து பஞ்சாபை சேர்ந்த ஆல் ரவுண்டர் சன்வீர் சிங்கிற்கு அதிக மவுசு உள்ளது.