ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்!

0
197
Taurus – Today's Horoscope!! A day to act in peace!
Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும் நாள். ராசிக்குள் சந்திராஷ்டமம் இருப்பதால் பிரச்சனைகளும் கண்டிப்பாக உள்ளதால் கவனமாக செயல்படுவது அவசியம். நிதி வருவதற்கு காலதாமதம் ஆகும்.

கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்றாலும் கவனமாக இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் மீது உங்களது கோபத்தை காட்ட வேண்டாம்.

உத்தியோகத்தில் வேலை பளு கூடும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில இன்னல்கள் இடையூறுகள் வரலாம் என்பதால் கூடுமானவரை கூட்டாளிகளையும் வாடிக்கையாளர்களையும் அனுசரித்து செல்வது அவசியம். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமாக இருப்பது நல்லது.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நலம்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில பிரச்சனைகள் எல்லாம் என்பதால் கூடுமானவரை அவர்களை அனுசரித்து செல்வது அவசியம்.

அரசியல்வாதிகள் வீண் விவாதங்களில் தலையிட வேண்டாம். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் கவனமாக செயல்பட வேண்டும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்

Previous articleமேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும் நாள்!
Next articleமிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! கலகலப்பு நிறைந்த நாள்!