தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள்!

Photo of author

By Selvarani

தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள்!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள். ராசிக்குள்ளேயே சந்திர பகவான் இருப்பதால் சங்கடமான அலைச்சல்கள் எல்லாம் வந்து சேரும். நிதி வருவதற்கு காலதாமதம் ஆகும்.

கணவன் மனைவி கண்டிப்பாக விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் வீண் அலைச்சல் உறுதியாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக கூட்டாளிகளை அனுசரித்து செல்வது அவசியம். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். இன்றைய தினம் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தென்படும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் எந்த ஒரு காரியமும் இழுபறிகிறது என்ற கவலையுடன் காணப்படுவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். அரசியல்வாதிகள் பயணங்களை மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் கால தாமதம் ஆகலாம். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.