சளி தொல்லையால் அவதிப்படுகின்றீர்களா? ஒரே நாளில் குணமாக இதனை செய்யுங்கள்!

0
59

சளி தொல்லையால் அவதிப்படுகின்றீர்களா? ஒரே நாளில் குணமாக இதனை செய்யுங்கள்!

தற்போதுள்ள காலநிலை மாற்றத்தினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படக்கூடிய சளி, இருமல், தொண்டை வலி ஆகியவற்றை வீட்டில் உபயோகப்படுத்தும் பொருளின் மூலமாக ஒரே நாளில் குணப்படுத்துவது எவ்வாறு என்று இந்த பதிவின் மூலமாக காணலாம்

சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய பொருட்களில் ஒன்றான மஞ்சள், ஏலக்காய், மிளகு மற்றும் கிராம்பு ஆகியவற்றை வைத்து தொண்டை வலி இருமல் ஆகியவற்றை எவ்வாறு சரி செய்யலாம். முதலில் மிளகு, ஏலக்காய், கிராம்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதனை அரைத்து பொடி செய்து காலை மற்றும் உறங்குவதற்கு முன் ஒரு டம்ளர் பாலில் கலந்து குடித்த வந்தால் இருமல் மற்றும் தொண்டை வலி பிரச்சனை ஒரே நாளில் குணமடைந்து விடும். மிளகில் பைபரின் என்கின்ற தாவர வேதிப்பொருள்கள் உள்ளது.

கிராம்பில் பாக்டீரியாக்களை அழிக்கக்கூடிய தன்மை இருக்கின்றது. மேலும் நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து நோயிலிருந்து நம்மை பாதுகாக்கும். அது மட்டும் இன்றி தினமும் காலையில் எழுந்தவுடன் பல் துலக்கி விட்டு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு கலந்து வாய் கொப்பளித்து வரும் பொழுது எந்த ஒரு தொற்றுக்கிருமையும் நம்முள் செல்லாது.

இரவு தூங்க செல்வதற்கு முன்பு 15 நிமிடத்திற்கு ஒரு டம்ளர் பாலில் மிளகுத்தூள், மஞ்சள் தூள், இரண்டு பல் பூண்டு ஆகிய சேர்த்து அந்த பால் அரை டம்ளர் அளவிற்கு வரும் வரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வர நெஞ்சு சளி, மூக்கடைப்பு போன்றவை நீங்கும்.

author avatar
Parthipan K