உயர்நீதி மன்றத்தின் அதிரடி! தூய்மை பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !!

உயர்நீதி மன்றத்தின் அதிரடி! தூய்மை பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

பொதுமக்களுக்கு நோய் அண்டாமல் இருக்க சுற்றுப்புறத்தை தினந்தோறும் இரவும் பகலும் உழைத்து தூய்மை செய்பவர்கள் தூய்மை பணியாளர்கள். ஆனால் இவர்களுக்கு உழைப்பிற்கு உரிய ஊதியம் வழங்கப்படுகிறதா? என்றால் இல்லை என தான் சொல்ல வேண்டும்.

தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு , நிரந்தர பணியாளர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு புகார்களும், போராட்டங்களும் நடைபெறுகின்றன.

தற்போது அரசு நிர்ணயித்த தொகை முழுமையாக கிடைக்க பெறவில்லை என பல்வேறு தூய்மை பணியாளர்கள் புகார்கள் செய்த வண்ணம் உள்ளனர். தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணியாற்றும் துமை மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படவில்லை.

இதனால் வந்த புகார்களை அடித்து மாநகராட்சி சார்பில் ஊதியம் தொடர்பான குழு அமைப்பதற்கு குழு ஓன்று அமைக்க அவகாசம் கேட்கப்பட்டது.

இதுப்பற்றி சென்னை உயர்நீதி மன்றத்தில் உழைப்போர் உரிமை இயக்க மாநிலத் தலைவர் கு.பாரதி கூறியுள்ள மனுவில் தேசிய வாழ்வாதார திட்டத்தின் கீழ் செயல்படும் தூய்மை மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படவில்லை.

குறிப்பாக சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலத்தில் வேலை பார்க்க கூடிய சுமார் 1500 தூய்மை மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு ரூ.424 ஐ உயர்த்தி வழங்க வேண்டும். சம வேலைக்கான சம ஊதியம் வழங்க குழு அமைத்து முடிவு செய்யும் வரை குறைந்த பட்ச ஊதியமாக மாதம் ரூ.18,401 வழங்குமாறு ஏற்கனவே ஐகோர்ட் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்த உத்தரவினை எதிர்த்து சென்னை மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட் டிவிசன் பெஞ்ச், அந்த உத்தரவிற்கு தடை விதித்துள்ளது எனவும் அந்த தடையை நீக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஐகோர்ட் நீதிபதிகள், ஆர்.மகாதேவன், மற்றும் ஜே.சத்திய நாராயண பிரசாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி சார்பில் ஊதியம் தொடர்பான குழு அமைக்க அவகாசம் கேட்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 3 மாதகாலம் அவகாசம் வழங்கப்படுகிறது.அதுவரை தினக்கூலியாக வழங்கப்பட்டு வந்த ரூ.424 ஐ ரூ. 500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.

 

 

Leave a Comment