திருப்பதி போக போறிங்களா? இது கட்டாயம் தேவஸ்தானம் அதிரடி!

0
233
are-you-going-to-tirupati-this-is-a-must-have-devasthanam-action
are-you-going-to-tirupati-this-is-a-must-have-devasthanam-action

திருப்பதி போக போறிங்களா? இது கட்டாயம் தேவஸ்தானம் அதிரடி!

திருப்பதிக்கு வரும் பொது மக்களுக்கு கோவில் தேவஸ்தானம் அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதிக்கு ஆண்டுதோறும் பொதுமக்கள் வைகுண்ட ஏகாதசிக்கு சிறப்பு பயணம் மேற்கொள்வர்.உலகப்புகழ் பெற்ற திருப்பதி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

தற்போது வைகுண்ட ஏகாதசி தொடங்கியுள்ளதால் ஜனவரி 1 முதல் 11 வரை சிறப்பு தரிசனம் செய்ய பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.வைகுண்ட நுழைவு வாயில் திறக்கப்பட்டு 11-ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு சிறப்பு தரிசனம் பெற பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதனிடையே கொரோனா பரவல் சீனாவில் அதிகரித்து இந்தியாவிலும் பாதிப்பு தொடங்கி உள்ளதால் மேலும் நாட்டில் அதிகரித்து வருவதற்கான சுழல் நிலவும் வேளையில் கடும் கட்டுப்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் விதித்துள்ளது.

அதன்படி திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம் செய்ய ரூ.300 டிக்கெட் பெறும் பக்தர்கள் ,ஜனவரி 1 முதல் 11 தேதி முன்பதிவு செய்தவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகளும்  செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும் எனவும், இரண்டு தவணைகளும் போடாதவர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும் எனவும் தேவஸ்தானம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Previous articleநீங்க கேங்கா வந்தாலும் சரி சிங்கிளா வந்தாலும் சரி.. இங்க உங்களுக்கு இடம் இல்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!!
Next articleமாநில அரசுகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு! மீண்டும் ஊரடங்கு அமல்?