தேர்வு முகமை வெளியிட்ட குட் நியூஸ்! ஜேஇஇ தேர்வு குறித்து வெளிவந்த முக்கிய தகவல்!

0
122
தேர்வர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்!! இனி மத்திய அரசு தேர்வுகள் தமிழில் தான்!!
தேர்வர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்!! இனி மத்திய அரசு தேர்வுகள் தமிழில் தான்!!

தேர்வு முகமை வெளியிட்ட குட் நியூஸ்! ஜேஇஇ தேர்வு குறித்து வெளிவந்த முக்கிய தகவல்!

வருடம் தோறும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வாக ஜேஇஇ நடைபெறும் பட்சத்தில் வரும் ஆண்டு ஜனவரி மாதம் இந்த தேர்வு நடைபெற உள்ளது. அவ்வாறு இந்த தேர்வு எழுத உள்ளவர்களுக்கு பல நிபந்தனைகள் உள்ள நிலையில், விண்ணப்பிக்கும் மாணவர்கள் கட்டாயம் பத்தாம் வகுப்பு பொது தேர்வு மதிப்பெண்களை பதிவிடுவது அவசியம்.

நடப்பு கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த வேலையில் கொரோனா தொற்று அதிகரித்த காரணத்தினால் தமிழக அரசானது  அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருந்தது.

எனவே இவர்களுக்கு தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படாததால் ஜேஇஇ தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களின் மதிப்பெண் பதிவிட முடியாமல் குழம்பி வந்த நிலையில் இது குறித்து தமிழக அரசு, தேர்வு முகமைக்கு கடிதம் ஒன்று எழுதியது.

பத்தாம் வகுப்பு மதிப்பெண் பதிவிடாமல் ஜேஇஇ தேர்வு எழுத அனுமதிக்குமாறு வலியுறுத்திய நிலையில் தற்போது தேசிய தேர்வு முகமை இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வரும் ஆண்டில் ஜேஇஇ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விண்ணப்பம் செய்யும் பொழுது அதில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிட தேவையில்லை. அதேபோல முன்பு விண்ணப்பித்த மாணவர்களின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் நீக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

Previous articleஎச்சரிக்கை! இதுதான் மாரடைப்பின் அறிகுறி!! மாரடைப்பு வராமல் தடுக்க என்ன செய்வது?
Next articleமக்களே எச்சரிக்கை.. சொத்து வரிகளுடன் ஆதார் பான் ஜிஎஸ்டி இணைப்பு! விளக்கமளிக்காத தமிழக அரசு!