எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் உடனே விண்ணப்பியுங்கள்! பொது சுகாதாரத் துறையில் அரசு வேலை வாய்ப்பு!

Photo of author

By Parthipan K

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் உடனே விண்ணப்பியுங்கள்! பொது சுகாதாரத் துறையில் அரசு வேலை வாய்ப்பு!

திருச்சி மாவட்டம் பொது சுகாதாரத்துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் லேப் டெக்னீஷியன், அலுவலக பணியாளர் தற்காலிக முறையில் வேலை, டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணிகளுக்கு காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விரும்பும் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பம் வரவேற்கப்பட்டு வருகின்றது.

நிறுவனம்: பொது சுகாதாரத்துறை.மொத்த காலிப்பணியிடம்: 54.பணியிடம்: திருச்சி.விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.12.2022.அதிகாரப்பூர்வமான இணையதளம்: tiruchirapalli.inc.in.

கல்வி தகுதி: 8, 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது டிப்ளமோ முடித்து இருக்கலாம்.வயது வரம்பு: அதிகபட்சம் 35 வயதுக்குள் இருப்பவர்கள் இந்த பணிக்காக விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை:விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் தேர்வு முறை மூலம் இந்த பணிக்காக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:அஞ்சல் மூலம் இதற்காக விண்ணப்பிக்கலாம்.அஞ்சல் முகவரி:துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,ரேஸ் கோரஸ் ரோடு, ஜமால் முகமது கல்லூரி அருகில் டிவிஎஸ் டோல்கேட்,திருச்சிராப்பள்ளி-620020.

மேலும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்திக்கொண்டு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நாளை மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். வேலைவாய்ப்பு பற்றி தகவலை தெரிந்து கொள்வதற்கு அதன் அதிகாரபூர்வ இணையதளத்தை கிளிக் செய்ய வேண்டும்.