விருச்சகம் – இன்றைய ராசிபலன்! உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!!

0
178
Scorpio – Today's Horoscope!! You have a busy day!
Scorpio – Today's Horoscope!! You have a busy day!

விருச்சகம் – இன்றைய ராசிபலன்! உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!!

விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள். சந்திர பகவான் சகாய ஸ்தானத்தில் இருப்பதால் இளைய உடன்பிறப்புகள் உங்களுக்கு அனுகூலமாக இருப்பதால் அவர்கள் மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் நன்மைகளை பெறுவீர்கள்.

 

குடும்ப உறவு அனுகூலமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை அருமையாக உள்ளது. வருமானம் நீங்கள் ங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிப்பதால் எல்லா காரியங்களையும் அருமையாக செய்து முடித்து மேல் அதிகாரிகளை வருவதோடு மட்டுமல்லாமல் எதிர்பார்த்த சில சலுகைகளையும் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் அதிரடியான சில நுணுக்கங்கள் வெற்றி அடையும்.

 

அரசியலில் இருக்கும் நண்பர்கள் மேடைப்பேச்சுகளில் ஜொலிப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுடன் பிறப்புகள் மூலம் சில நன்மைகளை அடைவார்கள். உடல் ஆரோக்கியம் அருமையாக இருக்கும்.

 

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அருமையான சூழ்நிலை அமையும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி கண்டிப்பாக வந்து சேரும்.

 

இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleபெண்களே கர்ப்பகாலத்தில் கால்கள் வீங்குகிறதா…கவலை வேண்டாம் இனிமேல் இதை ஃபாலோ பண்ணுங்க !
Next articleதனுசு – இன்றைய ராசிபலன்! உற்சாகம் அதிகரிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here