ஒன்ப்ளஸ் நிறுவனம் தனது ஒன்ப்ளஸ் 11 ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது, அதற்கு முன் நிறுவனம் தனது தயாரிப்பை சீனாவில் ஜனவரி 4 ஆம் தேதியன்று வெளியிட திட்டமிட்டுள்ளது. அதே தேதியில் இந்தியாவில் நிறுவனம் தனது தயாரிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் எப்படி இருக்கும் என்று மக்கள் பலரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் நிலையில் ஒன்ப்ளஸ் நிறுவனம் அதன் வடிவமைப்பை வெளியிட்டுள்ளது. ஒன்ப்ளஸ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ படங்களில் அந்த மொபைலின் பின்புற பேனலின் வடிவமைப்பு கட்டப்பட்டுள்ளது.
ஒன்ப்ளஸ் 11 மொபைலானது உங்களுக்கு இரண்டு வண்ண விருப்பங்களை வெளியிட்டுள்ளது, அதாவது மொபைல் பச்சை மற்றும் கருப்பு வண்ணங்களில் உங்களுக்கு கிடைக்கிறது. மொபைலின் பின்புற பேனலில் பெரிய வட்ட வடிவ கேமரா பம்ப், டிரிபிள் கேமரா லென்ஸ் உள்ளது, இதில் ஹாசல்பிளாட் பிராண்டிங் கிடைமட்டமாக வைக்கப்பட்டுள்ளது. ஹாசல்பிளாட் பிராண்டிங் கேமராவின் மையத்தில் அமைந்துள்ளது. பச்சை வண்ணம் கொண்ட ஒன்ப்ளஸ் 11 வெர்ஷன் சாடின் பூச்சுடன் வருகிறது மற்றும் கருப்பு நிற வெர்ஷன் ஆனது சாண்ட்ஸ்டோன் பூச்சுடன் வருகிறது.