கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! காலையில் சலசலப்பும் மதியத்திற்கு மேல் கலகலப்பு நிறைந்த நாள்!

0
195
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!

கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! காலையில் சலசலப்பும் மதியத்திற்கு மேல் கலகலப்பு நிறைந்த நாள்!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் சலசலப்பும் மதியத்திற்கு மேல் கலகலப்பு நிறைந்த நாள். கணவன் மனைவி ஒற்றுமை சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது மிகவும் நன்று. குடும்ப உறுப்பினர்கள் ஓரளவிற்கு அனுகூலமாக இருப்பார்கள் என்றாலும் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம்.

உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சற்று இழுபறி ஆகலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும்.

உபயோகத்தில் உள்ள பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தென்படும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் வாழ்க்கையில் சில செலவுகளை நீங்கள் இன்றையதினம் எதிர்பார்க்கலாம். அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் அமைதியாக செயல்பட வேண்டும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!!உற்சாகமும் ஆற்றலும் மிகுந்த நாள்!
Next articleசிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! சலசலப்பு உண்டாகும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here