ஒரு நொடியில் கண்கட்டி வித்தை காட்டிடரே! மெட்ரோ ரயிலுக்கு இணையாக ஓடி அசத்திய வாலிபர்!

ஒரு நொடியில் கண்கட்டி வித்தை காட்டிடரே! மெட்ரோ ரயிலுக்கு இணையாக ஓடி அசத்திய வாலிபர்!

மெட்ரோ ரயில் சேவையை தற்போது மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். மெட்ரோ மூலம் நாம் செல்லும் இடங்களுக்கு விரைவாக செல்ல முடியும்.இந்நிலையில் சென்னையில் தற்போது மெட்ரோ வழித்தடங்கள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றது.இந்த மெட்ரோ ரயில் சேவையானது அடுத்த 2026 ஆம் ஆண்டு முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதனையடுத்து மெட்ரோ சேவை அதிகளவில் பயன்படுவதினால் சிங்கிள் ஸ்மார்ட்டு கார்டு திட்டம் அறிமுகம் செய்யப்படும் அந்த திட்டத்தின் மூலம் மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்துகளில் ஒரு கார்டை பயன்படுத்தி பயணம் செய்யலாம் என கூறப்படுகின்றது.பேருந்துக்களில் பணம் கொடுப்பதற்கு பதிலாக இந்த கார்டை பயன்படுத்தி ஒரு முறை ரீ சார்ஜ் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு நம் நாட்டில் மெட்ரோவில் திட்டங்கள் அமலுக்கு வரும் நிலையில் லண்டன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் ஒரு நிறுத்தத்தில் இறங்கியுள்ளார்.உடனே அவர் ஓட தொடங்கி அந்த மெட்ரோ அடுத்த நிறுத்தத்திற்கு வருவதற்குள் இவர் அடுத்த நிறுத்தத்திற்கு மெட்ரோவின் வேகத்திற்கு இணையாக ஓடி அதே மெட்ரோ ரயிலில் ஏறியுள்ளார்.அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.அவருடைய ஓடும் திறமையை பார்த்து நெட்டிசன்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர் .

Leave a Comment