மாநகராட்சிகளில் பணி புரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க – விஜயகாந்த் கோரிக்கை!!    

Photo of author

By Rupa

மாநகராட்சிகளில் பணி புரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க – விஜயகாந்த் கோரிக்கை!!    

Rupa

Make employees working in Municipal Corporations permanent - Vijayakanth's request!!

மாநகராட்சிகளில் பணி புரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க – விஜயகாந்த் கோரிக்கை!!

தமிழக அரசு அரசாணை எண் 152 என்பதை அமல்படுத்தி இனி ஒவ்வொரு அலுவலகத்திலும் ஆணையர் பொறியாளர் மேலாளர் சுகாதார ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மட்டும்தான் அரசின் கீழ் இயங்கும் என்று தெரிவித்தது. இதனை தவிர்த்து குடிநீர் வழங்கல் பிரிவு திருவிழாவுக்கு பராமரிப்பு உள்ளிட்ட அனைத்தும் அவுட்சோர்சிங் முறையில் நிறுவப்படும் என்று கூறியது. இதனை பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் அவர்கள் இது குறித்து அறிவு போன்ற வெளியிட்டுள்ளார்.

அனைத்து மாநகராட்சிகளிலும் பணிபுரியும் தற்காலிக மற்றும் தினக்கூலி பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். கடைநிலை ஊழியர்களான தூய்மை பணியாளர்களை முதன்மை பணியாளர் என்று அரசு ஆணையிட வேண்டும்.

அரசாணை 152 ஐ ரத்து செய்து அரசாணை வெளியிட்டு பழைய முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.