எனக்கு இளைய தளபதி கொடுத்த சூப்பர் கிப்ட்! சாண்டி மாஸ்டர் நெகிழ்ச்சி!

0
205

எனக்கு இளைய தளபதி கொடுத்த சூப்பர் கிப்ட்! சாண்டி மாஸ்டர் நெகிழ்ச்சி!

தமிழ்நாட்டில் இளைய தளபதி என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபீசில் வசூலையும் குவித்து விடும். தற்போது நடிகர் விஜய் வம்சி தயாரிக்க தெலுங்கு இயக்குனர் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் அவருடன் பிரபு பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ யோகி பாபு, உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 24ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் ரஞ்சிதமே, தீ தளபதி அம்மா சென்டிமென்ட் பாடல் என பாடல்கள் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றது. தீ தளபதி பாடலை நடிகர் சிம்பு சம்பளம் வாங்காமல் பாடியிருப்பார். மேலும் அந்தப் பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். பாடல் நன்றாக வந்ததையொட்டி நடிகர் விஜய் சாண்டி மாஸ்டருக்கு பரிசு ஒன்றினை அனுப்பி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் பூங்கொத்துடன், ஸ்வீட்டும் இருந்தது.

இதனை அடுத்து சாண்டி மாஸ்டர் மிகவும் மகிழ்ச்சியுடன் தனது இணையதள பக்கத்தில் விஜய் அனுப்பிய பரிசினை புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார். இது மிகச் சிறந்த பரிசு. நன்றி விஜய் சார். அதனால்தான் நீங்கள் தளபதி. இன்று பதிவிட்டுள்ளார். இந்த படங்கள் தற்போது சோசியல் மீடியாக்களில் மிகவும் பரவலாக்கப்பட்டு வைரலாகி உள்ளது.

Previous articleஎன்னை பலரும் வச்சிருக்காங்க – அமுமக பொதுச்செயலாளர் டிடிவி யின் பரபரப்பு பேட்டி!!
Next articleமிகவும் எச்சரிக்கை! முட்டையை இதில் வைத்து பயன்படுத்தினால் உயிருக்கே ஆபத்து!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here