டிஜிட்டல் மயமாக்கப்படும் தேசிய ஊரக வேலை திட்டம் வருகை பதிவு! எந்த தேதியில் இருந்து தெரியுமா?
மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலை உறுதித் திட்டம் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசால் கடந்த 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் நோக்கமாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.மேலும் இதன் மூலம் கிராமப்புற தொழிலாளர்களுக்கு ஒரு நிதி ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு அதற்கு நாளொன்றுக்கு ரூ 214 ஊதியம் தரப்பட்டது.
இந்நிலையில் தேசிய ஊராக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் வருகை வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டமானது கட்டாயமாக்கபட்டுள்ளது.வருகை பதிவை டிஜிட்டல் மயமாக்கும் பணி கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது.
தேசிய மொபைல் கண்காணிப்பு முறை மூலம் இதற்காக ஒரு செயலி உருவாக்கப்படும் இதன் மூலமாக வருகை பதிவு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த நடைமுறை அனைத்து ஊராக வளர்ச்சி மற்றும் ஊராக துறை அலுவலர்களும் ,ஊராட்சி மன்றத் தலைவர்களும்,ஊராட்சி செயலர்களும்,திட்ட ஒருங்கிணைப்பாளர்களும் பனித்தள பொறுப்பாளர்களும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.இந்த புதிய திட்டத்தின் மூலம் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடைபெறும் அனைத்து முறைகேடுகளும் தடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.