தமிழ்நாட்டில் ஊடுருவிய அதிபயங்கர கடத்தல் கும்பல்!! தமிழக அரசை எச்சரிக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்!

0
206
Becoming refugees in our own land.. Get out of the NLC!! Bamaka leader Anbumani started the walk!!
Becoming refugees in our own land.. Get out of the NLC!! Bamaka leader Anbumani started the walk!!

தமிழ்நாட்டில் ஊடுருவிய அதிபயங்கர கடத்தல் கும்பல்!! தமிழக அரசை எச்சரிக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்!

தமிழ்நாட்டில் போதை பொருள் உபயோகமானது தலைவிரித்து ஆடும் அளவிற்கு வளந்துள்ள நிலையில் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்போதிலும் ஏதும் கட்டுப்படுவது போல தெரியவில்லை.இந்த சூழலில் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் தற்பொழுது இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்துள்ளதாக தகவல் வெளியானதையடுத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.அதில்,

உலகின் மிகக்கொடிய போதைமருந்து கடத்தல் கும்பல் தலைவனான முகமது நாஜிம் முகமது இம்ரான் தமது கூட்டாளிகளுடன் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஊடுருவியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. எல்லையோர பாதுகாப்பு குறைபாடுகளையே இது காட்டுகிறது.

முகமது இம்ரான் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தப்பி வரக்கூடும் என்று தமிழக உளவுத்துறைக்கு மத்திய உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதற்குப் பிறகும் கடலோரக் காவல்படை, தமிழகக் காவல்துறையின் பாதுகாப்பை மீறி முகமது இம்ரான் தமிழகத்தில் நுழைந்தது எப்படி?

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஹெராயின், கோகெய்ன் கடத்தல் கும்பல்களுடன் முகமது இம்ரானுக்கு வலிமையான பிணைப்பு உண்டு. 2019-ஆம் ஆண்டில் துபையில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இம்ரான், அங்கு பிணையில் விடுதலையான நிலையில் தப்பியுள்ளான்.

தமிழ்நாட்டில் போதைமருந்து கலாச்சாரம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் முகமது இம்ரானின் ஊடுருவல் நிலைமையை மேலும் மோசமாக்கக்கூடும். முகமது இம்ரானை உடனடியாக கைது செய்து நாடு கடத்த வேண்டும்.

போதைப்பொருள் உபயோகிப்பு அதிகரித்து இருக்கும் இந்த சூழலில் இவ்வாறு அதன் தலைவர்கள் தமிழ்நாட்டில் புகுந்துள்ளது பெரும் பாதிப்பை உண்டாக்கும் என்பதால் அந்த கடத்தல் தலைவனை கைது செய்து நாடு கடத்த வேண்டும் என கூறியுள்ளார்.

Previous articleஉயிரை பணயம் வைத்து வேலை செய்த செவிலியர்களுக்கு இந்த கதியா? – தமிழக அரசை கண்டிக்கும் பாமக நிறுவனர்!
Next articleமேஷம் – இன்றைய ராசிபலன்! அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள்!!