பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு இதனை செய்து கொடுங்கள்… சூப்பர் ரெசிபி..!

0
287

விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கு பிடித்த வகையில் சூப்பரான மசாலா ப்ரெட் டோஸ்ட் எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுவோம்.

தேவையானவை:

பிரெட் துண்டுகள் – 5 முட்டை – 3 பெரிய வெங்காயம் -1 கொத்தமல்லித் தழை – சிறிதளவு பச்சை மிளகாய் – 2 சில்லி ப்ளேக்ஸ் – ½ தேக்கரண்டி மிளகு தூள் – ¾ தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி வெண்ணை – 2 – 3 தேக்கரண்டி

செய்முறை :

முட்டையை நுரை வரும் வரை நன்றாக அடித்து கொள்ளவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, சில்லி ப்ளேக்ஸ், மிளகுத் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதில், வெண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். வெண்ணெய் உருகியதும் பிரெட்டை முட்டை கலவையில் தோய்த்து தோசைகல்லில் போட்டு வேகவைத்து எடுக்கவும். மிதமான தீயில் இரண்டு பக்கமும் வேகவைத்து எடுத்தால் சுவையான மசலா பிரெட் தயார்.

Previous articleபொங்கல் பண்டிகை எதிரொலி! கிடு கிடுவென உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்!
Next articleபொது தேர்விற்கு இவர்கள் விண்ணபிக்க இதுவே கடைசி நாள்! தேர்வுத்துறை வெளியிட்ட தகவல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here