முக்கிய அறிவிப்பு: மூத்த குடிமக்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்தது!

0
131

முக்கிய அறிவிப்பு: மூத்த குடிமக்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்தது!

மூத்த குடிமக்களுக்கு அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அரசின் திட்டத்தை பயன்படுத்தும் மூத்த குடிமக்களுக்கு அதிக பணம் கிடைக்கப்போகிறது. அரசு சிறுசேமிப்புத் திட்டத்தின் வட்டியை அரசு அதிகரித்துள்ளது, இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு 8% வட்டி கிடைக்கும்.

நிதியமைச்சகத்தின் அறிவிப்பின்படி, அரசு முன்பு மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் 7.6 சதவீத வட்டி விகிதத்தை வழங்கி வந்தது, இனிமேல் ஜனவரி-1 முதல் மக்களுக்கு 8 சதவீத வட்டி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.

சிறு சேமிப்புத் திட்டத்தில் பெறப்பட்ட வட்டி ஒவ்வொரு காலாண்டிலும் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. SCSS திட்டத்தில் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கணக்கை திறக்கலாம் மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்களும் இந்த திட்டத்தில் கணக்கை திறந்துகொள்ளலாம்.

இந்தத் திட்டத்தில் கணக்கு தொடங்குவதற்கு குறைந்தபட்சத் தொகையாக ரூ 1000 மற்றும் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையிலும் முதலீடு செய்யலாம். நீங்கள் ரூ.1 லட்சத்திற்கு குருவாக கணக்கில் பணத்தை செலுத்தலாம், அதுவே ரூ.1 லட்சத்திற்கு மேல் இருந்தால் நீங்கள் காசோலையாக கொடுக்க வேண்டும்.