ரிசர்வ் பேங்க் வெளியிட்ட தகவல்! மிக முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளாக இவை உள்ளது!
நேற்று ரிசர்வ் வங்கி ஆர்பிஐ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனியார் வங்கிகளாக ஐசிஐசிஐ மற்றும் ஹெச்டிஎப்சி ஆகியவை அமைப்பு ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளாக உள்ளது.இந்த சிறப்பு நிலையைத் தொடர்வதன் மூலமாக, பொருளாதார நெருக்கடி காலங்களில் அரசின் ஆதரவு இந்த வங்கிகளுக்கு கிடைக்கும்.
மேலும் நிதிச் சந்தையிலும் இந்த வங்கிகளுக்கு சில முன்னுரிமைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு அமைப்பு ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகள் பட்டியலில் இடம்பெற்றது போல நடப்பாண்டிற்கான பட்டியலிலும் எஸ்பிஐ, ஐசிஐசிஐ மற்றும் ஹெச்டிஎப்சி வங்கிகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ஆம் தேதி வங்கிகளிடமிருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கான டிஎஸ்ஐ பி பட்டியலில் எஸ்பிஐ ,ஐசிஐசிஐ வங்கிகள் உள்ளது.மேலும் இதனுடன் ஹெச்டிஎப்சி வங்கியும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது 2022 ஆம் ஆண்டு மார்ச் 31 தேதி வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் நடப்பாண்டிற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.