சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இந்த பொருட்கள் எடுத்து செல்ல தடை! தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு! 

0
183

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இந்த பொருட்கள் எடுத்து செல்ல தடை! தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு!

மாலை அணிந்து பக்தர்கள் செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில் தான்.ஆண்டு தோறும் மண்டல பூஜைக்காக நடை திறப்பது வழக்கம்.அதே போல கடந்த 2022ஆம் ஆண்டும் நடை திறக்கப்பட்டது.முதல் நாளில் இருந்தே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

அதனால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும் பக்தர்களுக்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

மேலும் கடந்த வாரம் பக்தர்கள் அதிகளவு வருகை புரிந்ததால் பெண்கள்,குழந்தைகள், சிறுவர்கள் என அனைவருக்கும் தனி தனியாக வரிசை அமைக்கப்பட்டது.

அதனையடுத்து ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டது.குறிப்பாக கடந்த நான்கு நாட்களில் மட்டும் லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதினால் பம்பை,சன்னிதானம், நிலக்கல் ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் வயிலாக நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

அந்த ஆலோசனை கூட்டத்தில் ஜனவரி 14 ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக பக்தர்கள் ஜனவரி 11ஆம் தேதியை கோவிலுக்கு வருகை புரிவார்கள்.மேலும் அவர்கள் மகர விளக்கு பூஜை முடியும் வரை இங்கேயே தங்கும் நிலை உள்ளது. அதனால் பம்பை முதல் சன்னிதானம் வரை எந்த ஒரு இடத்திலும் சமையல் செய்ய அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவானது தீயினால் ஏற்படும் விபத்தை தடுக்க உதவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களை பக்தர்கள் எடுத்து செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சன்னிதானத்தில் சமயலுக்கு பயன்படும் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பம்பையில் இருந்து சன்னிதானம் வரும் சரக்கு வாகனங்கள் கண்காணிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.மேலும் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் வழித்தடங்கள் முழுக்க போலீசார்,தீயணைப்பு துறையினர் கண்காணித்து வருகின்றனர்.24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வசதி உண்டு என கூறப்பட்டுள்ளது.