கண்முன்னே கையால் சாக்கடை அள்ளிய ஊழியர் கண்டுகொள்ளாத எம்எல்ஏ ! அவர் மீது நடவடிக்கை பாயுமா?
எம் எல் ஏ தன் கண்முன்னே ஒருவர் கையால் கையால் சாக்கடை அள்ளியதை கண்டு கொள்ளாததற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ திமுகவை சார்ந்த எபினேசர். இவர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தபோது, தண்டையார் நகர் பகுதியில் தெருவொன்றில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு தண்ணீர் செல்ல வழி இல்லாததால் சேரும் சகதியும் ஆகி சாக்கடை அடைப்பு ஏற்பட்டு உள்ளது என மக்கள் புகார் கூறினர்.
அந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட எம்எல்ஏ சாக்கடையாக கிடந்ததை கண்டு கோபம் அடைந்தார். இதனை அடுத்து உடன் வந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் கண்டனம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் ஊழியர் ஒருவரை வரவழைத்து சாக்கடையை சுத்தம் செய்ய வைத்தனர். சுத்தம் செய்ய வந்த அந்த ஊழியரும் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் முழங்கை அளவு கையை உள்ளே விட்டு கழிவுகளை வெளியே அள்ளி சாக்கடையை வெறும் கைகளால் அள்ளி சுத்தம் செய்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவலானது. எம்எல்ஏ முன்னர் ஊழியர் ஒருவர் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் வெறும் கையால் சாக்கடையை சுத்தம் செய்தது கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது பற்றி தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி சமூக அவலத்திற்கு துணை போகும் எம்எல்ஏ. குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் எப்போதும் இந்த நிலைக்கு தள்ளப்பட வேண்டுமா? சமூக நீதி காவலர்கள் என்று மார்தட்டிக் கொள்பவர்களின் சமூகநீதி! இந்த எம்எல்ஏ மீது நடவடிக்கை பாயுமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.