Breaking News, State

இந்த பகுதிகளுக்கான வாரந்திர சிறப்பு ரயில் தேதி நீட்டிப்பு! தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்!

Photo of author

By Parthipan K

இந்த பகுதிகளுக்கான வாரந்திர சிறப்பு ரயில் தேதி நீட்டிப்பு! தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்!

Parthipan K

Button

இந்த பகுதிகளுக்கான வாரந்திர சிறப்பு ரயில் தேதி நீட்டிப்பு! தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்!

கொரோனா காலகட்டத்தில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.அதனால் மக்கள் வெளியே செல்ல தொடங்கியதினால் போக்குவரத்து சேவைகளுக்கும் தொடங்கியது.

மேலும் கடந்த நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் பணி புரிபவர்கள் மற்றும் ,கல்வி பயில்வார்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இருக்க சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கபட்டது.அதனை தொடர்ந்து கார்த்திகை தீப திருநாளிற்கு அனைத்து பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.

ஆம்னி பேருந்தின் கட்டணம் உயர்ந்து வருவதினால் பெரும்பாலனா மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.மேலும் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அனைத்து இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.இந்நிலையில் விருதுநகர், காரைக்குடி, மானாமதுரை, தென்காசி, பட்டுக்கோட்டை வழியாக எர்ணாகுளம் மற்றும் வேளாங்கண்ணி ரயில் நிலையங்களுக்கு இடையே வாரந்திர சிறப்பு ரயில்கள்  இயக்கப்பட்டது.

மேலும் இந்த வாரந்திர சிறப்பு முறையில் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இயக்கப்படும் என அறிவிக்கபட்டிருந்தது.ஆனால் தற்போது பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த ரயில் சேவையானது ஜனவரி  மாதம் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.அந்த வகையில் எர்ணாகுளம் வேளாங்கண்ணி வாரந்திர சிறப்பு ரயில் ஜனவரி 7,14 போன்ற தேதிகளில் சனிக்கிழமை தோறும் எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 1.10 மணிக்கு புறப்படும்.

மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.மறுமார்க்கமாக வாரந்திர சிறப்பு ரயில் ஜனவரி 8,15 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் வேளாங்கண்ணியில் இருந்து மாலை ஆறு மணிக்கு புறப்படும் ரயிலானது மறுநாள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு புதிய ஆண்டில் பொன்னான செய்தி…மார்ச் மாதம் மிகப்பெரிய மகிழ்ச்சி காத்திருக்கிறது!

காங்கிரசின் எம்எல்ஏ திருமகன் ஈவெரா காலமானார்! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

Leave a Comment