படம் தோல்வி! தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து நஷ்ட ஈடு வழங்கிய பிரபல நடிகர்!

0
262

படம் தோல்வி! தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து நஷ்ட ஈடு வழங்கிய பிரபல நடிகர்!

பிரின்ஸ் படத்தின் தோல்விக்கு பொறுப்பேற்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து நஷ்ட ஈடு வழங்கியுள்ளார்.தமிழ்நாட்டின் பிரபலமான நடிகர்களுள் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த படங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம் இவரது நடிப்பு இருக்கும். இந்நிலையில்  சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் வெளியான படம் தான் பிரின்ஸ்.

இது தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் தயாரானது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சார்ந்த  மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் சத்யராஜ்,பிரேம்ஜி நடிக்க தமன் இசையமைத்து மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படம் கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்தை தமிழ்நாட்டில் மதுரை அன்புச் செழியன் வெளியிட்டு இருந்தார். படத்திற்கு ஏராளமான நெகட்டிவ் விமர்சனங்கள் வந்ததை அடுத்து படத்தின் வசூலை அது பெரிதும் பாதித்தது. எனவே படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறாமல் தோல்வியை தழுவியது. எனவே இந்த படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு ரூ.12 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.

இதனை எடுத்து படத்தின் தோல்விக்கு பொறுப்பேற்றுள்ள சிவகார்த்திகேயன் படத்தின் தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து நஷ்ட ஈடு வழங்கியுள்ளார். சிவகார்த்திகேயன் மூன்று கோடியும் தயாரிப்பு நிறுவனம் மூன்று கோடியும் சேர்த்து 6 கோடியாக விநியோகஸ்தர்களுக்கு
நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக வழங்கியுள்ளனர்.

Previous articleமீண்டும் 2 லட்சம் டுவிட்டர் கணக்கு முடக்கம்! எலான் மஸ்க் வெளியிட்ட தகவல்! 
Next articleவெறித்தனமாக வெளியானது வாரிசு ட்ரைலர்…பக்காவான குடும்ப திரைப்படம் என்பதை நிரூபித்துவிட்டது !