நெய்வேலி சுரங்கத்தில் பரபரப்பு! கேண்டினில் உணவு சாப்பிட்ட ஊழியர்களுக்கு வாந்தி மயக்கம்!

0
166

நெய்வேலி சுரங்கத்தில் பரபரப்பு! கேண்டினில் உணவு சாப்பிட்ட ஊழியர்களுக்கு வாந்தி மயக்கம்!

என்எல்சி கேண்டினில் உணவு சாப்பிட்ட ஊழியர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

நெய்வேலியில் இந்திய அரசுக்கு சொந்தமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம் செயல் பட்டு வருகிறது. இந்திய அரசின் நவரத்தின வகையைச் சார்ந்த இது ஆண்டிற்கு 30.6 டன் பழுப்பு எரிபொருள் உற்பத்தி செய்கிறது. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இது நவரத்தின மதிப்பு பெற்றது.

பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு சொந்தமான இந்த நிறுவனத்தில் பணிபுரிவதற்கு உணவருந்தும் வகையில் என்எல்சி கேண்டில் ஒன்று செயல்பட்டு வருகிறது. என்எல்சி சுரங்கத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் இந்த கேண்டினில் உணவு அருந்தி வருகின்றனர்.

இந்நிலையில் வழக்கம்போல் சுரங்கத் தொழிலாளர்கள்  நெய்வேலி என்எல்சி கேண்டினில் உணவு அருந்தி கொண்டிருந்தனர். இதனை அடுத்து அவர்களுக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதனால் உணவருந்தி பாதிக்கப்பட்ட 22 பேர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில் கேண்டினில் சுரங்க தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் எலி கிடைத்ததாக  குற்றச்சாட்டு வெளிவந்துள்ளது. சாப்பாட்டில் எலி கிடந்தது போன்ற ஒரு புகைப்படமும் வெளியாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Previous articleஎய்ம்ஸ் யின் முதல் படியே என்னால் தான்.. இந்த வருமானம் மட்டும் இல்லையென்றால் திமுக வால் ஒன்றும் செய்ய முடியாது – அன்புமணி ராமதாஸ்!  
Next articleரெயில் படிக்கட்டில் பிரபல நடிகர் பயணம்! கண்டனம் தெரிவித்த ரெயில்வே நிர்வாகம்!