நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு சிறந்த வருமானத்தையும் பாதுகாப்பையும் பெற விரும்பினால் அஞ்சல் அலுவலகங்கள் வழங்கும் திட்டங்களில் முதலீடு செய்யலாம். அஞ்சல் அலுவலகம் வழங்கும் பிரபலமான திட்டங்களில் ஒன்றுதான் கிசான் விகாஸ் பத்ராவில் (KVP) திட்டம், இந்த திட்டத்தில் பங்களிப்பதம் மூலம் நீங்கள் ஆண்டுதோறும் 6.9 சதவீத கூட்டு வட்டியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் நீங்கள் முதலீடு செய்தால் உங்களது டெபாசிட் தொகை 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்களில் (124 மாதங்கள்) இரட்டிப்பாக கிடைக்கும். உதாரணமாக நீங்கள் இந்த திட்டத்தில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் அடுத்த 124 மாதங்களில் உங்களுக்கு ரூ.2 லட்சமாக கிடைக்கும்.
கேவிபி திட்டத்தில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு தற்போது 6.9% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதில் நீங்கள் குறைந்தபட்சம் ரூ. 1000 டெபாசிட் செய்யலாம், முதலீட்டிற்கு அதிகபட்ச வரம்பு இல்லை மற்றும் ரூ. 100 இன் மடங்குகளில் டெபாசிட் செய்யலாம். கேவிபியின் கீழ் டெபாசிட் செய்யப்பட்ட தொகை அவ்வப்போது நிதி அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட காலத்தின்படி முதிர்ச்சியடைகிறது. கணக்குதாரர் இறந்தால் அவரது நாமினி/சட்டப்பூர்வ வாரிசுக்கு கணக்கு மாற்றப்படும்.