ஓடும் ரயிலில் ஏறிய பயணிக்கு நேர்ந்த சோகம்!! மரணத்திலிருந்து காப்பாற்றிய காவலர்!

0
126

ஓடும் ரயிலில் ஏறிய பயணிக்கு நேர்ந்த சோகம்!! மரணத்திலிருந்து காப்பாற்றிய காவலர்!

ஓடும் ரயிலில் ஏறிய பயணி ஒருவர் தடுமாறி கீழே விழுவதும் அவரை பாதுகாவலர் மீட்டதும் ரயில்வே துறையின் இணைய பக்கத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மக்கள் ஓடும் ரயிலில் ஏறவோ இறங்குவோம் முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருந்தால் பல்வேறு விபத்துக்களை தவிர்க்கலாம். இந்திய ரயில்வேயின் ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ள வீடியோவில் பயணி ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்று தடுமாறி விழுவதையும் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பாய்ந்து ரயிலுக்கு அடியில் பயணி செல்லாமல் காப்பாற்றியதும் வெளியாகி பெரும் பாராட்டுகளை குவித்து வருகிறது.

பீகாரில் பூரணியா ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் பயணி ஒருவர் ஏற முயல்கிறார். அப்போது பாதுகாப்பு படை ஜவான் RPF ஒருவர் அவரை பாய்ந்து ரயிலுக்கு அடியில் செல்லாமல் காப்பாற்றுகிறார். பின்னர் அந்தப் பயணியை எச்சரித்து இதுபோல் ஏறக்கூடாது என்று கூறி அனுப்பி வைக்கிறார்.

பீகாரில் நடந்த இந்த நிகழ்ச்சி அங்குள்ள ரயில்வே சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ரயில்வே நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வெளியிட்டுள்ளது. பயணியை காப்பாற்றிய பாதுகாப்பு  வீரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்த சம்பவத்தை போல் யாரும் ஓடும் ரயிலில் ஏறவோ இறங்கவோ கூடாது. பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Previous articleவாரிசு திரைப்படத்தின் முக்கிய பிரபலம் மரணம்! சோகத்தில் ஆழ்ந்த படக்குழுவினர்!
Next articleஅடுத்த இரண்டு நாட்களுக்கும் கனமழை! எந்தெந்த இடங்களில் தெரியுமா?