தனுஷ் நடித்த ‘அசுரன்’ திரைப் படத்திற்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்றால் தேசிய விருதை புறக்கணிப்போம் என்று இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற சினிமா விழா ஒன்றில் இயக்குனர் அமீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் ‘அசுரன்’ படம் குறித்து மிகப் பெருமையாக பேசினார். இந்தியாவில் உள்ள மிகச்சிறந்த இயக்குனர்களில் வெற்றிமாறன் ஒருவர் என்றும், வடசென்னை படத்தில் தன்னுடைய ராஜன் கேரக்டர் மிகச் சிறப்பாக அமைய அவர் தான் காரணம் என்றும் புகழாரம் சூட்டினார்.
மேலும் வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ திரைப்படம் இந்திய திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க ஒரு திரைப்படம் என்றும் அந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைக்கவில்லை என்றால் ஒட்டுமொத்த தேசிய விருதையும் தமிழ் சினிமா புறக்கணிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
வெற்றிமாறனின் முந்தைய படமான ’வடசென்னை’ திரைப்படம் பல தேசிய விருதுகளை வென்று இருக்க வேண்டும் என்றும் ஆனால் ஒரு சில அரசியல் காரணங்களால் அந்தப் படத்துக்கு விருது வழங்கப்படவில்லை என்றும் அமீர் அதை விழாவில் பேசினார். அமீரின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.