மின் கட்டணம் குறைப்புக்கு வாய்ப்பில்லை! அமைச்சர் திட்டவட்டம்!

0
182

மின் கட்டணம் குறைப்புக்கு வாய்ப்பில்லை! அமைச்சர் திட்டவட்டம்!

தற்போது மின்வாரியம் இருக்கும் சூழ்நிலையில் மின்கட்டண குறைப்பு என்பது இயலாத ஒன்று என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது;

தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்ற போது மின்வாரியம் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது. அப்போது மின்வாரியம் 1.59 லட்சம் கடனில் இருந்தது. ஆண்டுக்கு வட்டி மட்டும் 16 ஆயிரத்து 511 கோடி செலுத்தப்பட்டது. மின்சார கொள்முதலுக்கே பணம் இல்லாமல் மூன்று மாதங்களில் மின்சாரம் முற்றிலும் தடைபடும் அபாய நிலையில் இருந்தது.

இதனால் வட்டி குறைப்பு நடவடிக்கை மூலம் ஆண்டுக்கு 2200 கோடி மிச்சப்படுத்தப்பட்டது. முதல்வரே நேரடியாக கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டதால் தடையற்ற மின்சாரம் என்பது சாத்தியமானது.

மின்வாரியத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றால் கட்டண உயர்வு மட்டுமே சாத்தியம். கட்டண உயர்வு மூலமே ஆண்டுக்கு 19 ஆயிரம் கோடி ரூபாய் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மேலும் தொழில்துறையினர் வர்த்தகத்தினர், மற்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கையை ஏற்று மின் கட்டணம் ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண வருவாய் மூலம் ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கு மேலும் மின் கட்டணத்தை குறைத்தால் நிலைமை மிகவும் மோசமாகி சிக்கலாகிவிடும். வர்த்தகத் துறையினர், தொழில் முனைவோர்,கொஞ்சம் பொறுத்துக் கொண்டு தொழில் வர்த்தகத் துறையின் பிரதிநிதிகள் இதனை தங்கள் துறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Previous articleதெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! பொங்கல் சிறப்பு ரயில் சேவை இந்த இடங்களில் மட்டும் மாற்றம்!
Next articleபிளஸ் டூ பயிலும் மாணவர்களின் கவனத்திற்கு! ஜனவரி 13ஆம் தேதிக்குள் கட்டாயம் இதனை செய்திருக்க வேண்டும்!