தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! பொங்கல் சிறப்பு ரயில் சேவை இந்த இடங்களில் மட்டும் மாற்றம்!
கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் அதிக அளவு வெளியே செல்லவில்லை. ஆனால் விமானம், ரயில், பேருந்து போன்ற போக்குவரத்து சேவைகள் முற்றிலும் பாதிப்படைந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மீண்டும் அனைத்து போக்குவரத்து சேவைகளும் தொடங்கியது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மூன்று மடங்காக அதிகரித்தது.
அதனால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை வர உள்ளது அதனால் தமிழக அரசு போக்குவரத்து சார்பில் அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாரத்தின் முதலில் இருந்தே அரசு பேருந்துகளில் முன் பதிவு தொடங்கி இருக்கைகள் அனைத்தும் நிறைந்து வருகின்றது.
அதனை அடுத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தாம்பரத்திலிருந்து கேரளா மாநிலம் கொச்சுவேலிக்கு இயக்கப்படவுள்ள பொங்கல் சிறப்பு ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தாம்பரத்திலிருந்து ஜனவரி 18ஆம் தேதி காலை 10:30 மணிக்கு புறப்படும் பொங்கல் சிறப்பு ரயில். அதற்கு அடுத்த நாள் அதிகாலை 3.30 மணிக்கு கேரளத்தின் கொச்சி வேலி சென்றடையும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த ரயில் வள்ளியூருக்கு காலை 1.18 மணிக்கு சென்றடைவதற்கு பதில் ஒரு மணிக்கு சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பதினால் பொங்கலுக்கு முன் தினமும் பொங்கல் முடிந்து அடுத்த நாளும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கை குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்ட பிறகு விடுமுறை உள்ளதா என அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.