போகி பண்டிகைக்கு இதற்கு அனுமதி இல்லை!! மாநகராட்சி அதிரடி!
போகி பண்டிகைக்கு குறிப்பிட்ட சில பொருட்களை எரிக்க மாநகராட்சி பொதுமக்களுக்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
வருகின்ற ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய நாட்களில் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் சுத்தம் செய்து தேவையற்ற பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். இந்த நிலையில் சென்னை மாநகராட்சி போகி பண்டிகைக்கு பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் சென்னையில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனையடுத்து வருகின்ற போகி பண்டிகைக்கு சென்னையில் சுற்றுச்சூழல் மாசு அடைவதை தவிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனை அடுத்து பொதுமக்கள் வருகின்ற ஜனவரி 13 மற்றும் 14ம் தேதிகளில் தங்களிடம் உள்ள உபயோகமற்ற துணி, ரப்பர் ட்யூப், டயர், மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 ஆவது மண்டலங்களில் உள்ள அனைத்து வார்டுகளிலும் உள்ள மக்கள் தங்களிடம் உள்ள உபயோகமற்ற பழைய பொருட்களை எரிக்காமல் அவற்றை அந்தந்த வார்டுகளில் வரும் தூய்மை பணியாளர்களிடம் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதற்காக மக்களுக்கு பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களில் ஆடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. என்று சென்னை மாநகராட்சியின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.