சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய திமுக அமைச்சர்!! பதவிக்கு ஆப்பு வைக்கும் வழக்கின் தீர்ப்பு!!
அதிமுக 2011ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சி அமர்த்தியதில் திமுக அமைச்சர்கள் பலர் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக வழக்கு தொடுத்திருந்தனர்.
அந்த வழக்கில் பல அமைச்சர்கள் சிக்கிய நிலையில் அதிக அளவு சொத்து குவிப்பில் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மீது மற்றும் அவரது மனைவி மீதும் அடுத்தடுத்து வழக்குகள் போடப்பட்டது. தற்பொழுது வரை இந்த வழக்கு நடந்து வரும் நிலையில் இன்று தான் அதற்கு தீர்ப்பு வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2012 ஆம் ஆண்டு இந்த வழக்கானது ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்டம் முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றதை அடுத்து தற்பொழுது 2022 ஆம் ஆண்டு இந்த வழக்கானது ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.இதில் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதத்தினை தெரிவித்தார்.
பின்பு இந்த வழக்கு டிசம்பர் 22 ஆம் தேதி தள்ளி வைத்த நிலையில், தன் மீது அவதூறு சுமத்தும் நிலையில் இவ்வாறு வழக்கு தொடரப்பட்டதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி தன் மீது எந்த ஒரு மூகாந்தரமும் இல்லை என்றும் திட்டவட்டமாக கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி இந்த வழக்கை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்த வழக்கு இன்று விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட வரும் நிலையில் கேகேஎஸ்எஸ் ஆர் ராமச்சந்திரனுக்கு எதிராக வழக்கு திரும்பினால் அவரது அமைச்சர் பதவி பறிபோகும் என கூறுகின்றனர்.
ஆனால் அரசியல் சுற்றுவட்டாரத்தில், அமைச்சராக இருந்த தென்னரசு மீதும் தான் 10 ஆண்டுகளாக சொத்து குவிப்பு வழக்கு இருந்து வந்தது. தற்பொழுது இவர்களுடைய ஆட்சி என்பதால் அவர் எளிதாக இதிலிருந்து வெளியேறி விட்டார். அதேபோல இவரும் சொத்துக் கொழுப்பு வழக்கில் இருந்து வெளியேறி விடுவார் என்று பேசி வருகின்றனர்.