வாடிக்கையாளர்களே இனி நீங்கள் வங்கிக்கு நேரடியாக சென்று அலைய வேண்டாம்! ரிசர்வ் வங்கி வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

0
219
Customers don't have to go straight to the bank anymore! Super update released by Reserve Bank!
Customers don't have to go straight to the bank anymore! Super update released by Reserve Bank!

வாடிக்கையாளர்களே இனி நீங்கள் வங்கிக்கு நேரடியாக சென்று அலைய வேண்டாம்! ரிசர்வ் வங்கி வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

தற்போது உள்ள காலகட்டத்தில் வங்கி கணக்கு என்பது மிக முக்கிய ஆவணங்களில்  ஒன்றாக உள்ளது. இந்தியாவில் பெரும்பாலானோர் வங்கி கணக்கை வைத்துள்ளனர். வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அனைத்து நேரங்களிலும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என வங்கி தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.

மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அதனை புதுப்பிக்க வேண்டும். அதற்கு கேஒய்சி சோதனை என்ற இந்திய ரிசர்வ் வங்கி தற்போது புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதன் மூலம் இனி முகவரியில் எந்தவித மாற்றமும் இல்லாமல் பழைய முகவரியில் உள்ள வாடிக்கையாளர்கள் தங்களின் கேஒய்சி சோதனைக்காக நேரடியாக வங்கிக்கு செல்ல வேண்டாம்.

அதற்கு பதில் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், ஏடிஎம், இமெயில் அல்லது ஆன்லைன் இவற்றின் மூலமாக செல்ப் டிக்ளரேஷன் செய்தால் மட்டும் போதுமானது. வங்கிகள் இனி வாடிக்கையாளர்களை நேரடியாக வங்கிக்கு வரும்படி அழைப்பு விடுக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் முகவரி மாற்றம் உள்ள வாடிக்கையாளர்கள் தங்களின் புதிய முகவரிக்கான ஆவணங்களை வங்கிக்கு நேரடியாக எடுத்துச் சென்றால் மட்டுமே மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleதிருப்பதிக்கு இந்த தேதிகளில் சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களின் கவனத்திற்கு! தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்!
Next articleஅறங்காவலர்கள் நியமனம் தேர்வு விண்ணப்பத்தில் இந்த கேள்வி கண்டிப்பாக இடம் பெற வேண்டும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!