ரிஷப்பின் அறுவை சிகிச்சை வெற்றி! பிசிசிஐ தகவல்! 

0
150

ரிஷப்பின் அறுவை சிகிச்சை வெற்றி! பிசிசிஐ தகவல்!

மும்பை மருத்துவமனையில் ரிஸபிற்கு செய்யப்பட்ட முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட். இவர் கடந்த 30 ஆம் தேதி தனது சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலத்தின் ரூர்கிக்கு காரில் தானே ஓட்டிச் சென்றார். அங்கு அவரின் கார் தடுப்புச் சுவரில் மோதி ஏற்பட்ட விபத்தில் ரிஷபின் கார்  தீப்பிடித்து எறிந்தது. ரிஷப் தலை, முதுகு, காலில் காயங்களுடன் தப்பினார். அங்கிருந்த போக்குவரத்து ஊழியர்கள் ரிஷப்பை காப்பாற்றி டேராடூன் மேக்ஸ் மருத்துவமனில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. கால் மூட்டு மற்றும் கணுக்காலில் அவருக்கு பலத்த அடிபட்டிருந்தது.

இதனை அடுத்து ரிஷப் மேல் சிகிச்சைக்காக டேராடூனில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மும்பை கொண்டுவரப்பட்டு அங்குள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு அவரின் தசை நார் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்று மருத்துவ குழுவினரால் ரிஷபிற்கு மேற்கொள்ளப்பட்ட தசைநார் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மேலும் ரிஷப் மருத்துவ குழுவினரின் தீவிர கண்காணிப்பில் வேகமாக குணமடைந்து வருகிறார் எனவும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்! எஃப்டி கணக்குகளின் வட்டி விகிதங்கள் உயர்வு!
Next articleமூன்றாவது டி20 போட்டி! டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தொடரை வெல்லுமா?