மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! பயண வாய்ப்புகளால் வாழ்க்கை மேம்படும் நாள்!

0
160
Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! பயண வாய்ப்புகளால் வாழ்க்கை மேம்படும் நாள்!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகளால் வாழ்க்கை மேம்படும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி ஒற்றுமை மிக சிறப்பாக அமையும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு பணியிட மாறுதல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் பயணங்களை மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உறவினர்கள் வருகையால் இல்லம் கலைகட்டி இருப்பதைக் கண்டு மணமகிழ்ந்து போவார்கள். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அருமையான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எதிர்பாராத பயண வாய்ப்புகள் உண்டாகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்..

Previous articleதமிழக அரசில் ரூ.50,000 வரை மாத சம்பளத்தில் பணிபுரிய விருப்பமா ? உடனே விண்ணப்பியுங்கள் !
Next articleமிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொருளாதார நிலை உயரும் நாள்!